அமுல் நிறுவனத்தை தொடர்ந்து வெர்கா நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அமுல் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது.. அமுல் பாலின் அனைத்து வகைகளுக்கும் மாற்றியமைக்கப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. அதன்படி தற்போது, அமுல் தாசா ஒரு லிட்டர் விலை ரூ.54 எனவும், அமுல் கோல்டு விலை ரூ.66; அமுல் பசும்பால் ரூ.56, அமுல் ஏ2 எருமைப்பால் ரூ.170 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது..
இந்நிலையில் அமுல் நிறுவனத்தை தொடர்ந்து வெர்கா நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது.. பஞ்சாப் மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் வெர்கா என்ற பெயரில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.. அந்நிறுவனம் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.. இந்த விலை உயர்வு இன்று (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி லிட்டருக்கு ரூ.57க்கு விற்கப்பட்ட ஸ்டாண்டர்ட் பால் தற்போது ரூ.60க்கும், ஃபுல் க்ரீம் பால் லிட்டருக்கு ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.66க்கும் விற்பனை செய்யப்படும். முன்பு லிட்டருக்கு ரூ.51க்கு விற்கப்பட்ட டோன்டு பால் இப்போது ரூ.54க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. இதை தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது..