ஏராளமான சத்துக்கள் நிறைந்த தினை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்களை உள்ளடக்கியது தினை. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தினை உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடையைக் குறைக்கிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.சோளம், கம்பு மற்றும் ராகி, அதாவது கேழ்வரகு ஆகிய தினை வகைகளில் அதிக நன்மைகள் உள்ளன. அதன்படி, ராகியில் கால்சியம், புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அரிசிக்கு ஒரு நல்ல மாற்றாக கருதப்படும் இதை எளிதாக கஞ்சியாக சமைத்து சாப்பிடலாம்.
இதேபோல், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ள சோளமும் கெட்ட கொழுப்புகளைத் தடுக்க உதவுகிறது. கோதுமை ரொட்டிக்கு பதிலாக சோள ரொட்டியை பயன்படுத்தலாம். இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்கவும், குடல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் பயன்படுகிறது. வெப்பமாக்கும் தன்மை கொண்ட கம்பை, குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டும். இருப்பினும், கோடைகால பானங்களைத் தயாரிக்க குளிர்விக்கும் உணவு அம்சங்களுடன் இதை கலக்கலாம். உதாரணமாக, கம்பு மாவுடன் மோர் கலந்து புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாக தயாரிக்கலாம். மற்ற தினைகளைப் போலவே, கம்பை தொடர்ந்து சாப்பிடுவது எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயை மேம்படுத்தவும், ஆரோக்கியமான கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்தை பெறவும் உதவுகிறது.
மேலும், செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தினைகளை உணவு வகைகளில் பயன்படுத்துவதற்கு முன் ஊறவைக்கவும். தினை சாப்பிடுவதற்கு முன் அவற்றை ஊறவைத்து முளைக்க விட வேண்டும். இல்லையெனில் அவற்றில் உள்ள பைடிக் அமிலம் மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் குறைக்கும். ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் தினைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.