fbpx

ஏப்.8ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்கள்..!! பள்ளிகளுக்கும் விடுமுறை..!! என்ன நடக்கிறது..?

ஏப்ரல் 8ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு சுமார் 1,000 கிலோ மீட்டர் வரை தெரியும்.

இந்நிலையில், வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டுக்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால், லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாப்புள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா, கனடாவில் தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றது. வரும் 8ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடுவார்கள். இதனால், அங்கு அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்தன்று மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். அவசரகால தேவைகலான மொபைல் போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிய கிரகணம் நிகழும் முன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை..!!

Chella

Next Post

கனடா பள்ளிகளிலும் உணவுத் திட்டம் அறிமுகம்..!! திமுக பெருமிதம்..!!

Wed Apr 3 , 2024
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் (கனடாவிலும்) நடைமுறைப்படுத்தப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என திமுக கூறியுள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 7.5.2022 அன்று, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி […]

You May Like