fbpx

குடியரசு முன்னாள் துணைத் தலைவரை கேலி செய்த பிரதமர் மோடி!… பழைய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் பதிலடி!

நாடாளுமன்றத்திற்கு வெளியே மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கரின் மிமிக்ரி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 2017ம் ஆண்டில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை தனது பிரியாவிடையின் போது பிரதமர் நரேந்திர மோடி “கேலி” செய்த பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய் அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது திரிணாமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினா. அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதனை தனது செல்போனில் படம் வீடியோ எடுத்தார்.

கல்யாண் பானர்ஜியின் இந்த செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தநிலையில், பிரதமர் மோடி மக்களவையில் கேலி செய்யும் விதமாக பேசும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவரை கேலி செய்ததாக பிரச்சனை எழுப்பி 142 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன. நாடாளுமன்ற வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில்ல. ஆனால், தற்போது கேலி செய்ததை பற்றி பேசுபவர்கள், இதற்கு முன்பு யாரையெல்லாம் கேலி செய்தார்கள். அதுவும் மக்களவையிலேயே அத்தகைய செயலில் ஈடுபட்டார்கள் என்பது நினைவுக்கு வருமா என பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

’நிவாரணப் பணிகளை உடனே முடிங்க’..!! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

Thu Dec 21 , 2023
துாத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடந்த 3 நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். […]

You May Like