தமிழ்நாட்டில் மினி பஸ் கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஏற்கனவே இருக்கும் பர்மிட்தாரர்களுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பர்மிட் பெறுவோருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 4 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மினி பஸ் புதிய கட்டணம்
4 முதல் 6 கிமீ வரை – ரூ.5
6 முதல் 8 கிமீ வரை – ரூ.6
8 முதல் 10 கிமீ வரை – ரூ.7
10 முதல் 12 கிமீ வரை – ரூ.8
12 முதல் 14 கிமீ வரை – ரூ.9
14 முதல் 16 கிமீ வரை – ரூ.9
18 முதல் 20 கிமீ வரை – ரூ.10