அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்றும், விவசாயிகள் அரசுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்த முன்வர வேண்டும் எனவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
வேளாண்மை, மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதுபோன்ற சட்டத்தை உருவாக்கினால், மாநிலங்களை ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது எப்படி என்று கேள்வியை சிலர் எழுப்புவார்கள் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.