fbpx

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்பு..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மகள் பாரதி (55). இவரது கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுடன் காட்டிபாடியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காட்பாடி அருகே லத்தேரியில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்பு..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

Wed Dec 7 , 2022
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலை புயலாக மாறலாம். இதன் காரணமாக சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும். மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், […]

You May Like