fbpx

ரஜினி Vs துரைமுருகன் | பழைய ஸ்டூடன்ட்ஸ்..!! பல்லு போன நடிகர்..!! – முற்றும் மோதல்

‘பழைய ஸ்டூடன்ட்ஸ் தான் பிரச்னை’ என்றும் நடிகர் ரஜினி பேசியதும், அதற்கு பதிலடியாக வயதாகி, பல்லுப்போன, நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியதும் தற்போது பேசு பொருளாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும். தி.மு.க., தலைவருமான கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு, ‘கலைஞர் எனும் தாய்’ என்னும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை பேசினார். ஸ்டாலின் தி.மு.க.,வை திறமையாக வழிநடத்துகிறார் என்றும், ‘பழைய ஸ்டூடன்ட்ஸ் தான் பிரச்னை’ என்றும், தி.மு.க.,வின் மூத்த தலைவர்களை இலைமறை காயாக குறிப்பிட்டு கிண்டலாக விமர்சனம் செய்தார். நடிகர் ரஜினியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானது.

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என தனக்கே உரிய பாணியில் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

Read more ; போனைப் போலவே மனித உடலிலும் ‘ஃப்ளைட் மோட்’ !. எப்படி வேலை செய்கிறது?

English Summary

Minister Duraimurugan said that young people are getting no chance because all actors are old, decrepit and still acting, and now it is a topic of conversation.

Next Post

பாலிகிராஃப் சோதனை என்றால் என்ன?. அது ஏன் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது?

Mon Aug 26 , 2024
What is a polygraph test? Why is it not valid in court?

You May Like