வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு வருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், இதனால் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது வழக்கமான பரிசோதனை என கூறப்பட்டாலும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியான பின்பே உண்மை நிலவரம் தெரியவரும். மேலும், அதன் அடிப்படையிலேயே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை காண திமுக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.