fbpx

”அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் காலமானார்”..!! முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் தாயார் அமராவதி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 94.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். ஒரு காலத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டவர் காலப்போக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்டு வருகிறார். வீட்டிற்கு மூத்தப்பிள்ளை என்பதால் எப்போதும் அம்மா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கக் கூடியவர்.

இவரது தாயார் அமராவதி அம்மாளை, கடைசி மூச்சு வரை இவர் தான் கவனித்துக்கொண்டார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் 94-வது வயதில் இன்று அதிகாலை காலமானார் அமராவதி அம்மாள். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

கள்ளத்தொடர்பில் காவலர்.! எரித்துக் கொன்ற காதலி.! பதற வைக்கும் சம்பவம்.!

Fri Dec 22 , 2023
கள்ளத்தொடர்பு காரணமாக போலீஸ்காரர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் காவலரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் பசாவனகுடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சஞ்சய். திருமணமான இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ராணி என்ற காவலருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து இருக்கிறார். இந்நிலையில் ராணி […]

You May Like