fbpx

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த பிரபல நடிகை…! உதவி கரம் நீட்டிய தமிழக அரசு…!

நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு மகள்களும் ரோஷன் என்ற மகனும் இருந்தனர்.

கணவர் சொந்தமாகப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, அவர்களும் ஒரு படத்தைத் தயாரித்தனர். ஆனால் படம் முடிந்ததும் பைனான்சியருக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாகவில்லை. இந்த கவலையில் என் கணவர் இறந்துவிட்டார்.

இப்பொழுது நடிகை ஜெயக்குமாரியும் யாருடைய ஆதரவும் கிடைக்காமல் மருத்துவமனையில் உயிர்க்காக போராடி வருகிறார். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகை ஜெயக்குமாரி முதியோர் உதவித்தொகை வேண்டும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அவருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை பெற ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்தும், அவருடைய செலவுக்கு ரூ.10,000 ரொக்கத்தை வழங்கினார்.

Vignesh

Next Post

 காஃபிக்கு பதில் இந்த பழத்தை சாப்பிட்டு அந்த நாளை தொடங்குங்கள் …. ஏன் காஃபி வேண்டாம் ? இதோ சில காரணங்கள்! ….

Mon Sep 19 , 2022
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை… காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து , உடலை சூடாக்கி மூளையை செயல்படவைக்கின்றது. ’கேஃபைன் ’ என்ற மூலக்கூறில் […]

You May Like