தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் மா.சுப்பிரமணியன். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை நிறைவேற்றி வருகிறார். அந்த அளவிற்கு சுறு சுறுப்பு கொண்ட அமைச்சராக மா.சுப்பிரமணியன் திகழ்கிறார். மேலும், தனது 64-வது வயதிலும் மாரத்தான் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, லேசான மயக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மா.சுப்பிரமணியன் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சரின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். விரைவில் மா. சுப்பிரமணியனின் உடல்நலம் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.