fbpx

சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! வழக்கை ரத்து செய்ய முடியாது..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு மனையை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவியின் பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின்பேரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மா.சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, “1998ஆம் ஆண்டு அந்த இடம் வாங்கப்பட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்திருந்தனர். அந்த இடத்தை நான் வாங்கியபோது, சிட்கோவுக்கோ அல்லது அரசுக்கோ எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதில் மோசடி என்ற பேச்சுக்கும் இடமில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், ”நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Read More : மாணவர்களே ரெடியா..? முன்கூட்டியே 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

English Summary

The Madras High Court has abruptly announced that the land grabbing case against Minister M. Subramanian cannot be quashed.

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 2% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

Fri Mar 28 , 2025
Happy news for central government employees.. Central government approves 2% dearness allowance hike..!!

You May Like