fbpx

தென்னை உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மெய்யநாதன்..!! என்ன தெரியுமா..?

தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. முன்னதாக, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளின் வகைப்பாட்டின்படி, தென்னை மட்டையில் இருந்து பொருட்கள் தயாரிப்பது “வெள்ளை” பிரிவின் கீழ் வருவதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தென்னை நார் அலகுகளை மறு வகைப்படுத்துவது தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார். தென்னை நார் தொழிலை உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் வகைப்படுத்துமாறு தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். இதற்கிடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தென்னை நார் தொழிலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்காக வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு ஆணையிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு தென்னை நார் தொழிற்சாலைகளுக்கான மாசுக் குறியீட்டு மதிப்பெண்ணை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ‘தென்னை நார் உடைத்தல்/டி-ஃபைபர் /பித் பதப்படுத்துதல் தொழில்’ ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது. இதற்கிடையே, தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளை வெள்ளை வகையில் தொடருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை நிற வகைப்பாட்டில் தொடர்கிறது. தற்போது, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஜூலை 2023ஆம் ஆண்டு தொழில்துறைகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை வகைகளாக வகைப்படுத்துவது தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிட்டது. இதில் தென்னை நார் உற்பத்தி (ஈரமான / சாயம் பூசும் செயல்முறை) ஆரஞ்சு பிரிவின் கீழும், தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை) பச்சை பிரிவின் கீழும், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி வெள்ளை பிரிவின் கீழும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமையில் நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவைகளுக்கு தீர்வுகாண அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், தற்போதைய நிலையில் இத்தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. ஜூலை 2023இல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது அனைத்து சங்கங்களும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Chella

Next Post

நெய்வேலியில் அதிர்ச்சி..!! விஷமாக மாறிய தண்ணீர்..!! இவ்வளவு வியாதிகளா..? அம்பலப்படுத்திய பூவுலகின் நண்பர்கள்..!!

Wed Aug 9 , 2023
நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டது. அதில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் பகுதிகளில் 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு […]

You May Like