fbpx

அடுத்த சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பொன்முடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் மக்கள் கூச்சலிட்ட நேரத்தில் அமைச்சர் பொன்முடி கெட்ட வார்த்தையில் திட்டியதாக வீடியோ வைரலாகி வருகின்றது.

ஏற்கனவே பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் தற்போது புது சர்ச்சையாக இது உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் உயர்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய இவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி வருகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கின்றது என கூறினார். பின்னர் அங்கிருந்த ஒன்றியக்குழு பெண் தலைவரை ’ ஏம்மா.. நீ.. எஸ்.சி.தானே ’ என கேட்டார். இது பெரிய சர்ச்சையாக மாறியது. மலித் பெண்ணை பார்த்து கேட்டதும்.அவரும் ஆமாம் என கூறுகின்றார். சாதி பற்றி கேட்பது திராவிட மாடலா என கேட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

இதையடுத்து பெண்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் ஒன்று இலவச பேருந்து. அதை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்கின்றார்கள். ’ இப்போ பஸ்ல நீங்க எப்படி போறீங்க.. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் , வேறு எங்கு போக வேண்டும் என்றாலும் ஓசி பஸ்ல போறீங்க’ என பேசினார். இதனால் ஓசி பஸ் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் இதற்கு மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் அதே விழுப்புரத்தில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் அமைச்சர் பொன்முடி. இன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் சூழ்ந்து இருந்தது. இதில் ஆத்திரமடைந்த அமைச்சர்’’ போடா மயி..’’ என்ற கெட்டை வார்த்தையால் பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Next Post

இசைக்கலைஞர் அருணா சாய்ராம் ’செவாலியே’விருது…

Tue Nov 1 , 2022
பிரபல கர்நாடக பாடகரான அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகலான அருணா சாய்ராமுக்கு 70 வயதாகின்றது. பிரான்ஸ் நாட்டின் உயரிய ’செவாலியே ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருக்கின்றார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி […]

You May Like