fbpx

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…!

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் ‌‌.

ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளதாக கூறினார். புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல் செய்யும் நோக்கத்தோடு ஆளுநர் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.

Vignesh

Next Post

அரபிக்கடலில் உருவானது பைப்போர்ஜாய் புயல்!... சென்னை வானிலை மையம் அலர்ட்!

Wed Jun 7 , 2023
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 4 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது கிழக்கு […]
புயல்

You May Like