தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பொன்முடியின் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கையும், எம்பியுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது திமுகவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு மோசமான விளக்கத்தை கொடுத்திருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்தியுள்ளார். இதுதொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் என்ற சிந்தனை கூட இல்லாமல், இப்படி கீழ்த்தரமாக பேசியுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
இந்நிலையில் தான், திமுக எம்.பி. கனிமொழி பொன்முடி பேச்சுக்கு நேரடியாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : ’விஜய் படத்தை நெருங்க கூட முடியல’..!! ’குட் பேட் அக்லி’ படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?