ஆந்திர மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ரோஜா ஆபாசப் படத்தில் நடித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சியினர் சிடிக்களைக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி அண்மையில் பேசியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரோஜா, நிர்வாணப் படத்தில் நடித்ததாக சொல்லி தன்னை சித்ரவதை செய்கிறார்கள் என்று கண்ணீர் மல்க பேசினார். இதன் எதிரொலியாக பண்டாரு சத்தியநாராயணா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணி தலைவர் வாங்கலபுடி அனிதா, அமைச்சர் ரோஜாவைக் கடுமையாகச் சாடினார். சத்தியநாராயணா கைதைக் கண்டித்துப் பேசிய அனிதா, “அமைச்சர் ரோஜா தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.
அப்போது மட்டும் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார். கடந்த காலங்களில் பேரவையில் ரோஜா பேசியதை எல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரோஜாவை யாரும் பெண் என்று கருதவில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருப்பவர்கள்கூட ரோஜாவை வெறுக்கிறார்கள்” என்றார்.
“அமைச்சர் ரோஜா பெண்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக ஒருநாள் அழுதார். ஆனால், நான்கரை ஆண்டுகாலமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் உள்ள அனைத்துப் பெண்களும் கதறி அழுதுகொண்டிருக்கின்றனர். இப்போது ரோஜா நடித்த படத்தின் டிரெய்லர் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்” என்றும் எச்சரித்தார்.