fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது..!! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சனையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது செப்டம்பர் 20ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கள்ளக்காதலியுடன் உல்லாசம்..!! திருமணத்திற்கு ’நோ’ சொன்ன காதலன்..!! அந்தரங்க உறுப்பை அறுத்த இளம்பெண்..!!

Wed Sep 20 , 2023
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்ஷ்யாம் ராய் (35). இவர், சரிதா தேவி (32) என்ற இளம்பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தொடர்பு வைத்திருந்தார். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராயிடம் சரிதா வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் வாலிபர். இந்நிலையில், ராயிடம் தன்னைத் திருமணம் செய்ய முடியுமா, முடியாதா என சரிதா தேவி கேட்டுள்ளார். திருமணம் செய்ய முடியாது என கன்ஷ்யாம் ராய் […]

You May Like