fbpx

மீண்டும் உள்ளே செல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி..!! ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம்..!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே, அவரின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர்.

அப்போது ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு இன்று (28.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, ஜாமீன் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது.

Chella

Next Post

’வயிறு, மார்புகளை Zoom பண்ணி’..!! ’பெண்களின் பிரா வெளியே தெரிந்தால்’..!! கொந்தளித்த பனிமலர்..!!

Tue Nov 28 , 2023
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது […]

You May Like