fbpx

#Tngovt: 100 யூனிட் இலவச மின்சாரம்…! ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டுமா….? செய்தியின் உண்மை என்ன…?

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பரவலாக எழுந்து வந்தது. அதன் பின்னே இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என அரசு சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்தி பரவலாக பரவி வந்தது.

https://www.youtube.com/watch?v=IG-hssVDf4c

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி; மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது வதந்திமின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

TNPSC தேர்வர்களே கவனம்...! இன்று குரூப் 1 தேர்வு...! காலை 9 மணிக்கு முன்பாகவே இருக்க வேண்டும்...!

Sat Nov 19 , 2022
தமிழகத்தில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட […]

You May Like