வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், அதே போல தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. எனவே மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என நேற்று முன் தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு 3,496 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என்று வீட்டாளர்கள் விரும்பினால், கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.பருவ. வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.