தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால், அதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அந்த ஆர்பாட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாகக் கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த கடிதத்தைக் காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும், 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதாகத் தெரிவித்த அண்ணாமலை தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. மேலும் தைரியமிருந்தால் மின்துறை மீது அண்ணாமலை வழக்கு தொடரட்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாத வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றார்.