பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆகவே அவருடைய இலாக மாற்றம் விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதை ஆளுனர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் தான் நிதி அமைச்சராக இருக்கின்ற தங்கம் தென்னரசு மின்சாரத் துறையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது