fbpx

ஐகோர்ட்டை எதிர்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு!… உச்சநீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணை!

தமிழ்நாடு அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம் தென்னரசு. இவர் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அப்போது 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் ரூ.76,40,443 லட்சம் சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த 2012 பிப்ரவரி 14ஆம் தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பான விசாரணை பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவித்தது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி, தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதே விவகாரம் தொடர்புடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மனுவை 5-ந்தேதி விசாரிப்பதால், இந்த மனுவையும் இணைத்து அன்றைய தேதியில் விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். இதை ஏற்ற நிதிபதிகள், தங்கம் தென்னரசின் ரிட் மனுவை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் ரிட் மனுவுடன் இணைத்து 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Kokila

Next Post

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாஜக..!! சவாலாக மாறிய விஜய்..!! இதை கவனிச்சீங்களா..?

Sat Feb 3 , 2024
“நாளைய வாக்காளர்கள் நீங்க.. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க.. உங்க பெற்றோர் கிட்டயும் இத சொல்லுங்க.. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படிங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட விஜய், நேற்று அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் தனது நிலைபாடு என்ன? என்பதை அவர் அறிவிக்கவில்லை என்றாலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை குறிப்பிட்டு, தான் எதை […]

You May Like