தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ள நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 19) என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரைத்தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தந்தை மகன் தற்கொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நீட் எதிர்ப்பு தீவிரமானது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது அந்த ஆவணப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே கண்கலங்கினார். அதன் பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக அவர் மத்திய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்என் ரவியையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.