fbpx

பரபரப்பு‌‌…! கருணாநிதி பாணியில் சாமியாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது பேச்சுக்கு பலர், கண்டனங்களும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வினித் ஜிண்டால்; சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது. கொரோனா, டெங்கு, மலேரியாவை போல் அதை ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியிருப்பது இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்வதற்கு தூண்டிவிடுவது போல் உள்ளது. இது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றமாகும் என கூறி டெல்லி காவல்துறையில் உதயநிதிக்கு எதிராக அளித்துள்ள புகார் அளித்துள்ளார்.

அதேபோல, உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி பரிசாக வழங்கப்படும் என கூறி அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி; இப்படித்தான் தலைவர் கருணாநிதியை சாமியார் ஒருவர் மிரட்டினார். ஆனால் கலைஞர் அவர்கள் தனது தலையை சீவினால் ரூ.1 கோடி பரிசு கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் என் தலையை சீவ 10 கோடி எதற்கு…? வெறும் 10 ரூபாய் சீப்பு போதும். சனாதனம் என்ற கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் பேசினேன். நான் தேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். நீ சாமியாருதான, உனக்கு எப்படி 10 கோடி வந்தது..? நீ உண்மையான சாமியாரா..? இல்ல டூப்ளிக்கேட் சாமியாரா..? என அயோத்தி சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Vignesh

Next Post

தீவிரமடையும் பருவமழை!… 2 மணிநேரத்தில் 62,350 முறை மின்னல்!… 12 பேர் உயிரிழப்பு!

Tue Sep 5 , 2023
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 2 மணிநேரத்தில் 62,350 முறை மின்னல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இந்திய வானிலை மையம், செப்டம்பர் 7-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் முழுவதும் தீவிரமான வானிலை இருக்கும் என்று எச்சரித்துள்ளது. […]

You May Like