fbpx

காலை 9.30 மணிக்கு 3 IAS அதிகாரிகள் குழுவுடன் ஒடிசாவிற்கு விரையும் அமைச்சர் உதயநிதி…!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர்.

கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. விபத்தில் சிக்கியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர். இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் ஒடிசா புறப்படுகின்றனர். அங்கு மீட்டு பணிக்கான அனைத்து உதவிகளையும் அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

Vignesh

Next Post

தஞ்சாவூர் | வாக்கி டாக்கி மூலமாக தகவல் பரிமாற்றம்…..! மது விற்பனை செய்த 6 பேர் அதிரடி கைது……!

Sat Jun 3 , 2023
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல்களை கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவர்கள் தப்பி ஓடி இருந்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்ட போது அவர்கள் குழுவாக […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like