fbpx

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த அமைச்சர்கள் ராஜினாமா..!! பெரும் பரபரப்பு..!!

பிரதமர் மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன், அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இது படு வைரலாகின. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. இதைத்தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப், ஆளும் கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ் ஆகியோர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். இதற்கு இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், மாலத்தீவு அதிபர் மொய்சூ விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில், 2 பேர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

Read More : ஓடிடியில் வெளியாகும் தங்கலான், வாழை..!! எப்போது எந்த தளத்தில் தெரியுமா..?

English Summary

2 Maldivian ministers have resigned after criticizing PM Modi.

Chella

Next Post

அதிகாலையிலேயே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. ராணுவ வீரர் காயம்!. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!.

Wed Sep 11 , 2024
Jawan Injured After Terrorists Open Fire In Jammu And Kashmir's Akhnoor, Troops On High Alert

You May Like