fbpx

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் துறையில் 527 வேலை வாய்ப்புகள் அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சரகத்தில் வேலை செய்வதற்கு அக்கவுண்டிங் ஆபிஸர் , என்போர்ஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் ப்ரொவிடட் ஃபண்ட் கமிஷனர் ஆகிய பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கவுண்டிங் ஆபிசர் மற்றும் என்போர்ஸ்மென்ட் ஆபிஸர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அசிஸ்டன்ட் பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷனர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பதவிகளுக்கான துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. என்போர்ஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் அக்கவுண்டிங் ஆபிஸர் பணிகளுக்கு 418 காலியிடங்களும் அசிஸ்டன்ட் பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷனர் பணிகளுக்கு 159 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 17ஆம் தேதிக்குள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் புதுடில்லியில் உள்ள தொழிலாளர் அமைச்சகத்தின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு ஊதியமாக மத்திய அரசின் லெவல் 10 விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் 25 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தப் பதவிக்காக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்காணலுக்கு பின் பணியமர்த்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் இந்த பணிகளைப் பற்றிய பிறவி விவரங்களை அறிய upsc.gov.in என்ற முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Rupa

Next Post

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?... தினமும் 20 நிமிடம் பின்னோக்கி நடந்து செல்லுங்கள்!... ஆய்வும்! அறிவுறுத்தலும்!

Mon Feb 27 , 2023
வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த […]

You May Like