மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருக்கின்ற சேம்பூர் பகுதியில் 13 வயது சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், கோடை விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் தனிமையாக இருந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆகவே சிறுமி தனிமையாக இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னர் மெல்ல, மெல்ல தன்னுடைய சாதித்திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி இருக்கிறார்.
அந்த சிறுமி தனிமையாக இருக்கும் சமயத்தில் அவருக்கு போதை மருந்துகளை கொடுத்து மயக்க நிலையில், இருக்கும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். இப்படி கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 6ம் தேதி வரையும் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் பாலியல் வன்கொடுமைக்கு அந்த சிறுமியை ஆளாக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் வீட்டிலிருந்த சில தங்க நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை திடீரென்று காணாமல் போனது ஆகவே சிறுமியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டிற்கு இளைஞர் அடிக்கடி வந்து செல்வதை உணர்ந்து கொண்ட பெற்றோர் தன்னுடைய மகளை விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த 6ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் வழங்கியிருக்கிறார்கள்.
அதோட அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இளைஞ்சரை கைது செய்த காவல்துறை அவர்களிடம் நடத்தி விசாரணையில் அவர் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார். அதாவது வீட்டில் பொருட்களை திருடி செல்போன் வாங்கியதாக அவர் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அதன் பெயரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.