சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், நாளை மறுநாள் “மிக்ஜாம் புயல்” உருவாகி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.