fbpx

சென்னையை மிதக்க வைத்த ’மிக்ஜாம்’ புயல்..!! நடிகர்கள் சூர்யா – கார்த்தி நிதியுதவி அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், இதுவரை கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

நிதி மட்டுமின்றி தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்க உள்ளனர். இந்த செயல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்..!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

Tue Dec 5 , 2023
தமிழ்நாட்டில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், முன்கூட்டியே பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால், தேர்வு பணிகளை விரைவில் தொடங்க மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு […]

You May Like