fbpx

அதிசய குழந்தை..!! 2 இதயம், 4 கை, கால்கள்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில், கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தைக்கு 2 இதயம், நான்கு கால்களுடன் பிறந்ததால் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

பிரசவத்திற்கு பிறகு சுமார் 20 நிமிடங்கள் உயிரோடு இருந்த குழந்தை அதன் பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர் கைலாஷ் கூறியுள்ளார். பிறந்த குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் 2 இதயங்கள், 2 முதுகெலும்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “இவ்வளவு சிரமமான பிரசவம் சுகப்பிரசவமாக செய்ய எங்களுக்கு சிரமமாக இருந்தது. ஆனால் சரியான நேரத்தில் சுகப்பிரசவம் செய்து கர்ப்பிணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதேசமயம், பிறந்த 20 நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண் இப்போது முற்றிலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். இந்த வகை பிரசவம் கான்ஜுனோகல் அனோமலி என்று அழைக்கப்படுகிறது” என்றனர்.

Chella

Next Post

பெற்ற மகளை வைத்து காதல் நாடகம் அரங்கேற்றிய தாய்..!! ரூ.10 லட்சம் கேட்டு மருத்துவரை மிரட்டிய கும்பல்..!!

Wed Mar 8 , 2023
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ரமேஷ் (45). இவரது மனைவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். மேலும், நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் சென்று வருகிறான். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி […]

You May Like