பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களிற்கும் நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அப்படியிருக்க இந்த திருக்கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி படைத்தது என்று கூறி வருகின்றனர். இந்த கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்?
கோயில் அமைப்பு : வயல்வெளிகளுக்கு இடையே அமைந்திருக்கும் இந்த கோயில் கோபுரம் நீண்ட கூம்பு வடிவ கோபுரமாக உள்ளது. கோபுரத்தில் மற்ற கோயில்களை போல் சிலை வடிவங்கள் இருக்காது. கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என்று எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. மிக குறைந்த அளவில் சிறிய, சிறிய வேலைபாடுகளை கொண்டு சற்று வித்தியாசமாக காட்சியளித்தது. கோயில் கருவரை முறம் வடிவில் இருப்பதால் நெல்லின் தூசிகளை நீக்குவது போல கெட்டது எல்லாம் ஒன்று கூடி விலகி விடுகிறதாம். பக்தர்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என விரும்பிய சாமிதாசன் என்று அழைக்கப்படும் சின்னசாமி, கோயிலை கட்டியுள்ளார். தொடர் ஆன்மீக ஈடுபாட்டிற்கு பின் இருபது, 30 ஆண்டுகள் கழித்து கோயில் கட்ட முடிவு செய்துள்ளார். ஒருவழியாக 2016-ல் இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
கெட்ட நேரத்தை மாற்றும் அதிசய திருக்கோயில் : இங்கு சாதாரண நாட்களை விட பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற பலவற்றையும் இயக்கும் சக்தியை படைத்த காலதேவி கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தால் கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பது இந்த கோயிலின் அளிக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த கோயிலுக்கு சென்று தரிசித்து வந்த பலரது வாழ்விலும் நன்மைகள் நடந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.
காலதேவி கோயிலின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மட்டுமே நடை திறக்கப்படும், சூரிய உதயத்திற்கு முன்பாக நடை சாத்தப்படும் என்பது ஆகும். பௌர்ணமி மட்டுமல்லாது அமாவாசை நாட்களிலும் விசேஷமான நாளாகவே இருந்து வருகிறது. கால தேவிக்கு உகந்த நாள் அமாவாசை தான் என்று அக்கோயிலின் பூசாரிகள் கூறி வருகின்றனர்.
கோவில் எங்கு உள்ளது? மதுரையிலிருந்து இராஜபாளையம் , குற்றாலம் செல்லும் சாலையில் சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எம்.சுப்புலாபுரம் என்ற ஊர். இங்கிருந்து கிழக்கே சுமார் 2 அரை கிலோ மீட்டரில் நேரக்கோயிலான ‘ஸ்ரீகால தேவி’ கோயில் அமைந்துள்ளது.
Read more ; குளிருக்கு தீ மூட்டிய போது நடந்த விபரீதம்.. குவைத் நாட்டில் இரண்டு தமிழர்கள் பலி..!!