சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசெல்வன். இவரது மனைவி வகித்தாபுளோரா. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்பி விளையாடி, 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது.
இதனை அறிந்த வகித்தா கணவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஞானசெல்வன் கதறி அழுதார்.
இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த வகித்தா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.அதன் பிறகு விசாரணை செய்து வருகின்றனர்.