fbpx

அரசின் திட்டம் குறித்து தவறான தகவல்..!! பிரபல செய்தி சேனல், எடிட்டர் மீது வழக்குப்பதிவு..!!

தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்பியதாக பிரபல செய்தி சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான மாநில அரசின் வணிக வாகன மானியத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் பிரபல இந்தி செய்தி சேனல் மற்றும் அதன் ஆலோசனை ஆசிரியர் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Aaj Tak செய்தி சேனல் மற்றும் அதன் ஆலோசனை ஆசிரியருக்கும் எதிராகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 505 மற்றும் 153 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தின் (கேஎம்டிசி) உதவி நிர்வாகி சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் சேஷாத்திரிபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாநகராட்சி திட்டம் குறித்து தவறான செய்திகளை பரப்பி, மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்குப்பதிவு குறித்து Aaj Tak செய்தி சேனலின் கன்சல்டிங் எடிட்டர் சுதிர் சவுத்ரி கூறுகையில், ”இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடத் தயாராக இருப்பதாகக் கூறினார். காங்கிரஸ் அரசு என் மீது எப்ஐஆர் போட்டது பற்றிய தகவல் கிடைத்தது. அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டிற்குள் சிகரெட் புகையை ஊதி தள்ளும் ஷகீலா..!! நீங்களா இப்படி..? கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

Wed Sep 13 , 2023
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகீலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், பாடகி தாமினி பட்லா, யூடியூபர் டேஸ்டி […]

You May Like