fbpx

கட்சிப் பணிகளில் காணவில்லை..!! சினேகன் மீது எழுந்த புகார்..!! அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்..!! மநீம அதிரடி

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இதனால் இந்த கட்சியின் வருங்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் நீதி மய்யம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 3.7 விழுக்காடு வாக்குகள் பெற்று நாங்களும் அரசியல் களத்தில் இருக்கிறோம் என்று அழுத்தமாக தெரிவித்தது.

அடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்து கட்சியுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. ஆனால், அதிலும் தோல்வியே மிஞ்சியது. நாடாளுமன்ற தேர்தலில் 3.7 விழுக்காடு பெற்ற கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 2.5 விழுக்காடு மட்டுமே வாக்குப் பெற்றது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும் மநீம இளைஞர் அணி இருக்கா..? இல்லையா..? என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் மௌலி ஜெயராமன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மௌலி ஜெயராமன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Chella

Next Post

ரூ.2,000 நோட்டு செல்லாதா..? அதெல்லாம் பொய்..!! செல்லுமாம்..!! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!

Thu Nov 2 , 2023
2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. எவ்வாறாயினும், இந்த நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. கடந்த […]

You May Like