fbpx

மித்தாலி ராஜுக்கும் எனக்கும் திருமணம்?… வாழ்நாளில் மறக்க முடியாது!… ஷிகர் தவான் ஓபன் டாக்!

Dhawan – Mithali Raj: இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாதது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பரஸ்பர சம்மதத்துடன் கடந்த ஆண்டு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடமிருந்து விவாகரத்து பெற்றார். 2023 அக்டோபரில் 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது, கொடுமையை முதன்மைக் காரணம் எனக் கூறி, ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இதையடுத்து, பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியுடன் தவான் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்தன. இதையடுத்து, தவானும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது பேசிய தவான், தினேஷ் கார்த்திக் போன்ற சில வீரர்களை போல் தாமும் ஐபிஎல் தொடரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடிய பின்பே ஓய்வு பெற உள்ளதாக தவான் கூறியுள்ளார்.

உங்கள் வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாத வதந்தி என்ன என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு ஒருமுறை முன்னாள் இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் தமக்கும் திருமணம் என்ற வதந்தியை மறக்க முடியாது என்று தவான் சிரித்துக் கொண்டே கூறினார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் மிதாலி ராஜுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்று கேள்விப்பட்டேன். இம்முறை ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய விதத்திற்காக பெருமைப்படுகிறேன்”

Readmore: Farmers: விவசாயிகளிடமிருந்து 262.48 லட்சம் டன் கோதுமை கொள்முதல்‌…!

Kokila

Next Post

3 குழந்தை பெற்றதால் பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்...! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...!

Sat May 25 , 2024
குஜராத் முனிசிபல் சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றதற்காக குஜராத்தின் தாம்நகர் நகராட்சியில் உள்ள அம்ரேலியைச் சேர்ந்த இரண்டு பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கீமா கசோடியா மற்றும் மேக்னா போகாவை ஆட்சியர் அஜய் தஹியா தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி மன்றத்தின் கவுன்சிலராக இருந்து, உடனடியாக அமலுக்கு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தனது முடிவில் தாம்நகர் நகராட்சியின் […]

You May Like