fbpx

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு …. 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்கும்….

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.. கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏ எழிலன். அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் , 1975 முதல் 1977 ஆகிய காலகட்டங்களில் நெருக்கடி பிரகடனப்படுத்தப்பட்டபோது , மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும், வனம் , நிர்வாகம் , கல்வி , எடை , மற்றும் அளவிடல் உள்ளிட்டவற்றை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது . கல்வி தொடர்பான சட்டங்கள் இயற்றி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு , மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகும். அமெரிக்க , ஆஸ்திரேலியா , கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மனுதாரர் தம் வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் இந்தவ ழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் எனக்கூறி தள்ளி வைத்தனர்.

Next Post

அடேங்கப்பா..!! சில நிமிடங்களில் காலியான இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

Thu Sep 15 , 2022
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியும் கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது […]
போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால் உலகக்கோப்பைக்கு வரமாட்டோம்..!! பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு..!!

You May Like