காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே.எஸ்.அழகிரி – ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் சம்பவத்திற்கு நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என்பதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், எம்.எல்.ஏ-வுமான ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார். ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.