fbpx

இம்ரான் கான் கைது…! பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவைகள் முடக்கம்…!

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நாடு முழுவதும் பெறும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் பல இடங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனங்களை எரித்ததோடு, பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

Serial Killer..!! 30 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்..!! வெளியாகும் முக்கிய தீர்ப்பு..!!

Wed May 10 , 2023
கடந்த 2008ஆம் ஆண்டு தனது 18 வயதில் கூலி தொழிலாளியாக டெல்லி வந்தவன் தான் ரவீந்தர் குமார். போதை பொருளுக்கு அடிமையான ரவீந்தர், ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் சிக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து இறுதியாக கொலையும் செய்து விடுவான். 2008இல் தொடங்கிய இந்த கொடூர செயல் 2015ஆம் ஆண்டு ரவீந்தர் காவல்துறையில் சிக்கும் வரை தொடர்ந்துள்ளது. 7 ஆண்டுகளில் 6 முதல் 12 […]
Serial killer..!! 30 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்..!! வெளியாகும் முக்கிய தீர்ப்பு..!!

You May Like