fbpx

உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்!… மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு சரிபார்ப்பது?

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி வழங்கி புதிய வசதியை அறிவித்துள்ளது.

சில நேரங்களில் பயனர்கள் தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் (ஓடிபி) வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஐடிஏஐ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்’ என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பயனர்கள் பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், பயனர்கள் ஏற்கனவே கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.மின்னஞ்சல்/மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம்.

Kokila

Next Post

அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள அட்டை!... தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்!

Wed May 17 , 2023
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தனி அடையாள அட்டை மற்றும் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது மட்டுமின்றி தேசிய மருத்துவ ஆணையத்திலும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அறிவிப்பின்படி, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதியை பெற்று சட்டப்பிரிவு 15ன் கீழ் மருத்துவர்களுக்கான தகுதி தேர்விலும், (என் இ டி – எக்ஸிட் […]

You May Like