fbpx

Election 2024 | தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன? அரசியல் கட்சிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதிலும் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தல்கள் மட்டும் இன்றி அருணாச்சலப் பிரதேசம் ஓடிசா ஆந்திர பிரதேசம் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. இவற்றிற்கான தேர்தல் தேதிகளையும் மத்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது.

மாதிரி நடத்தை விதி: நாட்டில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகள் ‘மாதிரி நடத்தை விதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல்களின் போது, ​​அனைத்து கட்சிகளும் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். “மாதிரி நடத்தை விதிகள்” மூலம் கட்சிகள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி பொதுத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் விதிகளை பின்பற்றும்படி அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது.

1960 ஆம் ஆண்டு கேரளா சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிகள் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது. 1962 லோக்சபா தேர்தலில், தேர்தல் கமிஷன் முதன்முறையாக அரசியல் கட்சிகளுக்கு இந்த விதிகளை தெரிவித்தது. லோக்சபா தேர்தல் மற்றும் 1967ல் நடந்த சட்டசபை தேர்தல்களில் இருந்து, மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகள் முடிவடையும் வரை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணியாற்றுகிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்கள் அரசு பணியாளர்கள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றுபவர்கள் ஆவார்கள். வாக்கெடுப்பு நடந்து முடிந்ததும் ‘மாதிரி நடத்தை விதி’ நீக்கப்படுகிறது.

மாதிரி நடத்தை விதி அமலுக்கு வந்த பின் அரசியல் கட்சிகள் செய்யக்கூடாதவை:

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களை நடத்த முடியாது. மேலும் அமைச்சர்கள் தங்களது அலுவலக வாகனத்தை வீட்டிற்கு செல்வதற்கும் அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அரசு வாகனத்தை அரசியல் பேரணிகள் அல்லது யாத்திரைகளுக்கு பயன்படுத்த முடியாது.

மாதிரி நன்னடத்தை விதி அமலுக்கு வந்த பிறகு, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு பயனளிக்கும் வகையில் அரசு பணத்தை பயன்படுத்த முடியாது. அரசு அறிவிப்புகள், பதவியேற்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய முடியாது. ஆனால் இந்த பணிகளில் ஏதேனும் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், அது தொடரலாம்.

கோயில், மசூதி, குருத்வாரா அல்லது வேறு எந்த மத ஸ்தலத்தையும் எந்த அரசியல் நிகழ்ச்சிக்கும், அரசியல் பேரணிக்கும் பயன்படுத்தக் கூடாது.

மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், எந்த ஒரு அரசு ஊழியரையும் அரசு இடமாற்றம் செய்யவோ அல்லது அவருக்கு எந்தப் பதவியையும் வழங்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட ஊழியரை இடமாற்றம் செய்வது உண்மையில் அவசியம் என்றால், தேர்தல் ஆணையத்திடம் அரசு அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முன்பும், ஊர்வலம் செல்வதற்கும், பொது அல்லது தனியார் இடங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கும் முன்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவது அவசியம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முடியாது.

கட்சிகள் மாதிரி நடத்தை விதிகளை மீறினால் என்ன நடக்கும்: எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ நடத்தை விதிகளை மீறினால், கட்சி அல்லது வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படலாம் அல்லது தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம். இதுமட்டுமின்றி, தேவைப்பட்டால், வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யலாம், அத்தகையவர்களை சிறையில் அடைக்கவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

மாதிரி நடத்தை விதிகள் பொதுமக்களுக்கான கட்டுப்பாடு: மாதிரி நடத்தை விதிகள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. உண்மையில் இவை சாதாரண மக்களுக்கும் பொருந்தும். அதாவது எந்தவொரு குறிப்பிட்ட நபரும் தனது அரசியல் தலைவருக்காக பிரச்சாரம் செய்தால், அவரும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள விதிகளைப் புறக்கணிக்கும்படி, எந்த ஒரு அரசியல்வாதியும் கூறினால் அதனை மறுக்க தனிநபருக்கு முழு உரிமை உண்டு. பிரசாரத்தின் போது யாராவது விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில், அவர் சிறையில் அடைக்கப்படலாம்.

Next Post

BIG BREAKING | '85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு’..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Sat Mar 16 , 2024
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுகையில், இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். நடப்பு மக்களவை தேர்தலில் 96.8 கோடி வாக்காளர்கள் […]

You May Like