fbpx

Weather Update: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்…!

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 4, 5, 6-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் 4-ம் தேதி வரை 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

Tollgate: தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் அமல்!… அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Mon Apr 1 , 2024
Tollgate: தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய […]

You May Like