fbpx

மீண்டும் வருகிறது கனமழை.! சென்னை மற்றும் தென் மாவட்டங்களை தாக்க அதிக வாய்ப்பு.! வானிலை அறிக்கை.!

கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பகுதிகள் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளையும் கனமழை புரட்டி எடுத்தது.

இந்த மழை காரணமாக பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இந்தப் புயல் மற்றும் கனமழை பதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார்.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் நெல்லை மற்றும் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தப் பகுதிகளில் சராசரியாக 15 சென்டிமீட்டர் மழை பொழியும் எனவும் கனமழையாக 25 சென்டிமீட்டர் வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Post

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி.! 600 கோடியை நெருங்கும் காவல்துறை .! சம்மன் அனுப்ப லிஸ்ட் ரெடி.!

Sun Jan 7 , 2024
தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முதலீடு செய்து லாபத்தை மட்டும் எடுத்துச் சென்றவர்களை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆருத்ரா நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் பொதுமக்களிடம் மோசடி செய்ததாக நிறுவனத்தின் மீது மத்திய புலனாய்வுத் துறையில் உனக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் […]

You May Like