fbpx

‘MODI Version 3.0’: “புல்லட் இரயில் முதல் செயற்கை நுண்ணறிவு வரை..” மோடியின் பார்வையில் வளர்ச்சி அடைந்த இந்தியா.!

இன்று மாநிலங்களவையில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 தொகுதிகளில் வெற்றி கிடைக்க ஆசீர்வாதம் வழங்கிய இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவுக்கு நன்றி” என்ற கிண்டலுடன் ஆரம்பித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பயணிக்க இருக்கின்ற பாதைக்கான திட்டங்களையும் வகுத்திருக்கிறார்.ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி 3.0 வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பாஜக அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

வர இருக்கின்ற ஆண்டுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசிய பிரதமர் மோடி “எங்கள் அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம் வெகு தொலைவில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசின் மூன்றாவது ஆட்சி காலத்தை சிலர் மோடி 3.0 என குறிப்பிடுகின்றனர். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக மோடி 3.0 அதன் முழு பலத்தையும் பிரயோகிக்கும்” என தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி அடைந்த பாரதத்தில் மருத்துவ வசதிகள் மிகப்பெரிய முன்னேற்றமடையும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது உறுதி செய்யப்படும். மின் கட்டணம் பூஜ்ஜியத்தை எட்டும். ஒவ்வொரு வீடுகளும் சோலார் மின்சாரத்தை தங்களுக்கு பயன்படுத்துவதோடு அதிலிருந்து தயாரிக்கப்படும் மின் சக்தியை விற்பனை செய்யலாம் . குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். இந்திய இளைஞர்களின் சக்தியை உலகம் காணும் நாள் தூரத்தில் இல்லை. ஏராளமான தொழில் துறைகள் இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்படும் . பல லட்சக்கணக்கான தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படும் .

பொது போக்குவரத்து வளர்ச்சி அடைவதோடு வளர்ந்த நாடுகளுக்கு இணையான புல்லட் ட்ரெயின் சேவையும் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்கள் புதிய உயரத்தை எட்டும். இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்காமல் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் தயாரிப்புகளில் அரசு கவனம் செலுத்தும்.டிஜிட்டல் இந்தியா, விண்வெளி ஆய்வு போன்ற துறைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கப் போகிறது.செயற்கை நுண்ணறிவை (AI) அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கும். உலகிலேயே தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் இந்தியா மாறும். இந்தக் கனவுகளை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வதே மோடி 3.0 என பிரதமர் ராஜ்யசபா உரையில் தெரிவித்திருக்கிறார்.

Next Post

டெல்லி: "இளம் பெண்ணை 1 வாரம் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த நண்பர்.." சூடான பருப்பை ஊற்றி சித்திரவதை.!

Wed Feb 7 , 2024
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பெண் தலைநகர் டெல்லியில் தனது நண்பரால் அடைத்து வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு சூடான பருப்பை அவரது உடலில் ஊற்றியும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் பரஸ் என்று தெரிய வந்திருக்கிறது. 28 வயதான அந்த இளைஞர் உத்தரகாண்ட் மாநிலத்தை […]

You May Like