இந்தியாவில் பலஇடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் ஐடி நடத்தி வரும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை என தீர்மானம் நிறைவேற்றி மம்தா பானர்ஜி அந்தர்பல்டி அடித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொல்கத்தா, டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வரம்புமீறி நடப்பதாக தீர்மானம் கொண்டு வர மேற்கு வங்க சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தை படித்துவிட்டு பின்னர் அவர் கூறுகையில் ’’ மத்திய அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகின்றது. இந்த தீர்மானம் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் எதிரானது கிடையாது. பாரபட்சத்துடன் செயல்படக்கூடாது என்பதற்காகவே தீர்மானம். பிரதமர் மோடி மத்திய அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுத்தச் செய்வதாக நான் நினைக்கவில்லை’’ என்றார்.
மேலும் , ஒரு சில தலைவர்கள்தான் தன் சுயநலத்திற்காக பின்னணியில் இருக்கின்றார்கள். சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு முறையாக அறிக்கை தாக்கல் செய்வதில்லை. இது பலருக்கு தெரியாது. இதனால்தான் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றனர். எனவே இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. என்றார்.