பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என மதுரையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணியசாமி; பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நிச்சயம் வெற்றி பெறுவார்.
பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்; 272 இடங்கள் வெற்றி பெற்றாலே போதும். இந்தியாவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது என்றார்.