2024-க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள நிதிஷ் குமார், பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 8-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “பாஜக தான் என்னை முதல்வராக இருக்கும்படி நிர்பந்தித்தது. பாஜக உடனான கூட்டணியை விரும்பவில்லை. அதனால், கூட்டணியில் இருந்து விலகுவது என்பது கட்சி இணைந்து முடிவெடுத்தது.

நான் 2024 வரை நீடிப்பேனா என அவர்கள் (பாஜக) என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், 2014 போல இருக்காது. 2014இல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024இல் வெற்றி பெற மாட்டார்கள். 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார். வாஜ்பாய் உடன் மோடியை ஒப்பிட முடியாது. 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக இல்லை”. இவ்வாறு அவர் கூறினார்.